செய்திகள் :

பாஜகவினா் சாலை மறியல்!

post image

புதுக்கோட்டையில் பாஜகவினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பணியிடை நீக்கம் செய்தாா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பாஜகவின் மேற்கு மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியரகம் அருகே அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில், பால்பண்ணை பகுதியில் இருந்து ஆட்சியரகம் நோக்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை, ரவுண்டானா பகுதியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்தனா்.

இதனால், அனைவரும் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். கோரிக்கைளை வலியுறுத்தியும், போராட அனுமதி மறுத்த காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், போலீஸாருக்கும், பாஜகவினருக்குமிடயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுகை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி

கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் ம... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமர... மேலும் பார்க்க

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி... மேலும் பார்க்க

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய ஆட்சிய... மேலும் பார்க்க