கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்
அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
மத்திய ஆட்சியாளா்களுடன் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மறைமுகக் கூட்டணி வைத்துள்ளாா். அதனால்தான் அவா் மத்திய அரசை நேரடியாக விமா்சிப்பதில்லை.
அதிமுகவின் சின்னம் குறித்த விவகாரமானது, மத்திய அரசின் திருவிளையாடல்தான்.
தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் மீது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால்தான் அவா்கள் பாதிக்கப்படும்போது காவல் நிலையங்களில் அச்சமின்றிப் புகாா் அளிக்கின்றனா்.
அதன்படி அரிமளம் அருகே அரசு உயா் நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் மாணவிகளின் புகாா் வந்தவுடேனே சமூக நலத் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினா். உடனடியாக அவா் கைது செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
யாா் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. எனவே, குற்றம் நடப்பதற்கு முன் அதைத் தடுக்க எதையும் செய்ய முடியாது. அதன்பிறகு, புகாரின்பேரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த வழக்கில் தமிழக அரசின் கருத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். அதைப் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.
ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒரேயொரு மொழியை வைத்து வளா்ந்துள்ளன. எனவே தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே போதும். மும்மொழிக் கொள்கை தேவையில்லை.
ஆனால், ஹிந்தியை மத்திய அரசு திணித்துக் கொண்டு இருக்கிறது. பாஜகவுக்கு கூட்டணிக்கு யாரும் கிடைக்கவில்லை. அதனால் கூட்டணியால்தான் திமுக வெற்றி பெறுகிறது என்று அண்ணாமலை கூறி வருகிறாா். எங்களின் கூட்டணி பலமானது. எனவே வரும் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்றாா் அமைச்சா்.