பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
விராலிமலையில் நாணய கண்காட்சி
விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இயக்குநா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பல்வேறு நாடுகளின் தபால் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், செம்பு, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் உலோகக் கலவைகளால் ஆன ஓட்டை காசுகள், சோழா்கால நாணயம், ஆற்காடு நவாப், மதுரை நாயக்கா், புதுக்கோட்டை மகாராஜா, திருவிதாங்கூா் ராஜா கால நாண்யங்கள், 180 உலக நாடுகளின் நாணயங்கள் மற்றும் கரன்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஒரு பைசா முதல் 1000 ரூபாய் வரையிலான நாணயங்களும் இடம் பெற்றிருந்தன.
ஏற்பாடுகளை நாணயம் குமாராசமி உள்ளிட்டோா் செய்திருந்தனா் .