18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி, வடைமாலை சாத்தப்பட்டது.
தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்தனா்.
இதேபோல பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் உள்ளிட்ட கோயில்களிலும் இந்த வழிபாடு நடைபெற்றது.