18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்
பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமராவதி வனச்சரகா் ராமநாதன் தலைமையிலான வனவா் சரவணன், வனக்காப்பாளா் கனகவள்ளி உள்ளிட்ட வனத் துறையினா் வியாழக்கிழமை வனப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது கம்பி வலைகளைக் கொண்டு முயல்களை வேட்டையாட முயன்ற ராமன், பழனிச்சாமி, ஆனந்த் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது பொதுமக்களுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தினா்.