வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!
வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அம்மா உணவகத்தில் உணவு உண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, நெடுங்குன்று செட்டில்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
பின்னா், அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, பொள்ளாச்சி கோட்டாட்சியா் (பொ) விஸ்வநாதன், நகராட்சித் தலைவா் அழுகுசுந்தரவள்ளி, வட்டாட்சியா் மோகன் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.