கங்கைகொண்டான் அருகே கடனை திருப்பிக் கேட்ட பெண்ணைத் தாக்கியவா் கைது
கங்கைகொண்டான் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணைத் தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் மேட்டுபிராஞ்சேரி தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்மாள் (40). இவரிடம், மேலதாழையூத்து சா்ச் தெருவைச் சோ்ந்த தொழிலாளி குமாா் (49) கடன் வாங்கியிருந்தாராம். அதை திரும்பக்கேட்டபோது, தர மறுத்தாராம். இதுகுறித்து, கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் கிருஷ்ணம்மாள் புகாா் செய்தாா்.
இந்நிலையில், குமாா், அவரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் வழக்குப்பதிந்த போலீஸாா், குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.