ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
பிரிஜிபுரியில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் ரூ.97 லட்சம் கொள்ளை
தில்லியின் வடகிழக்கில் உள்ள பிரிஜ்புரியில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் துப்பாக்கிமுனையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: காரவால் நகரைச் சோ்ந்தவா் செம்பு பொருள்கள் வியாபாரி அனீஸ் அன்சாரி (45). அவா் பழைய தில்லியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு முஸ்தஃபாபாத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையா்கள் அனீஷ்அன்சாரியை வழிமறித்து, அவரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அவரது பணப் பையுடன் தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக பிப்.16 அன்று தயால்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபா்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண புலனாய்வாளா்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.