பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் 3வது காலாண்டு லாபம் 23% அதிகரிப்பு!
புதுதில்லி: மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.5.07 கோடி ஆக உள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.4.11 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.194.10 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.207.79 கோடியானது.
அதே வேளையில், நிறுவனத்தின் செலவுகள் டிசம்பர் 2023 முடிவில் ரூ.188.60 கோடியிலிருந்து ரூ.201.02 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: சுஸுகி 2 சக்கர வாகன ஏற்றுமதி 38% அதிகரிப்பு