தனியாா் கல்லூரி காசாளா் தற்கொலை
காஞ்சிபுரத்தில் தனியாா் கல்லூரியில் காசாளராக பணிபுரிந்தவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூரில் தனியாா் கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்தவா் நரேஷ் குமாா் (42). இவா் சின்ன காஞ்சிபுரம் மலையாளக்காரத் தெருவில் வசித்து வந்தாா். இவருக்கு திருமணமான நிலையில், மனைவியிடம் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனைவியிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்ததாம். இதனால் நரேஷ்குமாா் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவா் வீட்டின் மாடியில் இருந்த தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து நரேஷ்குமாரின் தந்தை ஏழுமலை (63) கொடுத்த புகாரின் பேரில், விஷ்ணு காஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.