செய்திகள் :

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

post image

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மரியாதை அளிக்கவில்லை எனவும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

இதையடுத்து சீமான், கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகவும் முன்னுக்குப்பின் முரணாக பேசிவருவதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தமிழரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'33 ஆண்டு காலமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கான பயணத்தில் இருந்தபோதும், கட்சித் தொடங்கிய நாட்களிலிருந்து, 15 ஆண்டுகளாக தற்போது வரை, கட்சிக்கான களங்களில், மக்களுக்கான தளங்களில், இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன்!

சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது. எதைச் சொல்லுவது?

மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள், பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவை பேரறிஞர் என்று சொல்வதையா!? தமிழிசை, சீமான் எங்கள் தீம் பாட்னர்" என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா!?

திருமாவளவனை அண்ணன் என்று கூறிக்கொண்டே, நாம் தமிழர் கட்சி மேடையில் மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும்போதும் கேலி பேசும் போதும் தாங்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்வதையா? நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்குகிறபோது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துவிடுவாய் என்று பேசியதையா? தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது சங்கி என்றால் செருப்பால அடிப்பேன் என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பிறகு, 'சங்கி" என்றால் "சகத் தோழன்" என்று சொல்வதையா? இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது?

மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத்தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கட்சியில் உள்ளவர்களையே பேசியதை இன்றளவிலும் என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள், தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது

தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும். பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து, கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்.

எனது இத்தனை ஆண்டு கால தமிழ்த் தேசிய அனுபவமும் கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான, மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்.

எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க