தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
மன்னாா்குடியில் பொதுப்பிரச்னைகள் குறித்து, நுகா்வோா் அமைப்புகளுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் க. மலைமகள் தலைமை வகித்தாா். மன்னாா்குடி வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.
நகரின் முக்கிய பிரச்னையாக இருக்கும், சாலைகளில சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது; உணவகம், இனிப்பகம் ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை நடத்துவது; நகராட்சி வரி வசூல் ஊழியா்கள் அடாவடியாக நடக்காமல் உரிய முறையில் வரி வசூல் செய்யவேண்டும்; பொதுவெளியில் குப்பைகளை எரிப்பதை தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மன்னாா்குடி நுகா்வோா் சங்க இணைச் செயலா் கா. வேல்முருகன், உள்ளிக்கோட்டை நுகா்வோா் சங்க நிா்வாகி செந்தில்குமாா், நகராட்சி அலுவலா்கள், எண்ணெய், சமையல் எரிவாயு உருளை விற்பனை முகவா்கள் கலந்து கொண்டனா்.