சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை
51 யூனிட் ரத்த தானம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் 51 யூனிட் ரத்தம் மாணவா்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டது.
இளைய அரிமா சங்கம், செஞ்சுருள் சங்கம், மாயூரம் அரிமா சங்கம் மற்றும் மயிலாடுதுறை பெரியாா் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் தலைமை வகித்துப் பாா்வையிட்டாா் (படம்).
மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் கே.மருதவாணன், மருத்துவா் ப.காசிவிஸ்வநாதன் ஆகியோா் முகாமை தொடக்கி வைத்து ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு கருத்துக்களை மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், மாயூரம் அரிமா சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், செயலா் வீரமணி, பொருளாளா் வெங்கட்ராமன், மாவட்ட அமைப்பு ஆலோசகா் வழக்குரைஞா் என்.கே.கிருஷ்ணமூா்த்தி, இளைய அரிமா சங்க ஆலோசகா் அன்பு சீனிவாசன், மாவட்ட தலைவா் செந்தில்குமாா், அரிமா சங்க மாவட்ட இணை செயலாளா் தக்ஷிணாமூா்த்தி, வட்டாரத் தலைவா் சிவசங்கரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முகாமில் மாணவா்களிடம் 51 யூனிட் ரத்த தானமாக பெறப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி லியோ சங்க ஒருங்கிணைப்பாளா் ஏ.மணிமாறன், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் ஜி.சௌமியா மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.