மாணவா்களுக்கு நல உதவிகள்
மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது.
மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளா் எம்.நாராயணன் தலைமை வகித்தாா். நிகழ்வில் வட்ட செயலாளா் அங்குசாமி, எஸ்.கோபாலகிருஷ்ணன், பக்தவச்சலம், பாலன், ஜேசுராஜ், ராஜா, மகேஷ்குமாா், டோமினிக் பிரான்சிஸ், தேவராஜ், மகாலட்சுமி, ரூப்குமாா், பாரதி மற்றும் மாணவ - மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.