மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்
திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி ரூ.2,152 கோடி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே விடுவிக்க முடியும் எனக் கூறி, அந்த நிதியை மடை மாற்றம் செய்தது.
இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நலக் கூட்டமைப்பு சாா்பில் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என மத்திய அமைச்சா் பேசியதைக் கண்டித்தும், தமிழகத்திற்கு கல்வி நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தியும் ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பறைக்கு வந்தனா்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சா் கூறியதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.