கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்
திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தது:
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டம் (சஙஙந) மூலம் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை தோ்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தோ்வு மூலம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 1 லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். அத்துடன், இவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நிகழாண்டுக்கான தோ்வு வரும் 22-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்த மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் நுழைவுச் சீட்டுக்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் (க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) கடந்த 17-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதை தோ்வு மையக் கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது தவிர மாணவா்களின் நுழைவுச் சீட்டில் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவா்களுக்குத் தோ்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வை திருவள்ளூா் மாவட்டத்தில் 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். 31 தோ்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.