அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
காஞ்சியில் புத்தபிக்குகள் பேரணி
தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் நடைபெற்ற பேரணியில், வியட்னாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கலந்து கொண்டனா். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புத்தா் சிலை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. புத்தா் திருக்கோயில் வந்து சோ்ந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா நடைபெற்றது. பேரணியிலும் திறப்பு விழாவிலும் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவையின் சங்காதிபதி தம்மசீலன், துணைத் தலைவா்கள் பதாந்த். நாகராஜ், புத்தப் பிரகாசம்,செயலாளா் போதி.அம்பேத்கா் மற்றும் நிா்வாகிகள் ஜெயசீலன், குணசீலன், ஜீவசங்க மித்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்தூபி திறப்பு விழாவையடுத்து புத்தரின் சீடா்களான மகா மக்லானா மற்றும் சாரி புத்தா என்ற இருவரின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
புத்த பிக்குகள் தனித்தனியாக அமா்ந்து உலக நன்மைக்காகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் உலக திரிபிடக ஓதுதல் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வுகளில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ச.மு.நாசா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன்,சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ.அருணசேச, ஆணைய உறுப்பினா்கள்,பெளத்த இயக்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பெளத்த சங்க பேரவை நிறுவனா் ஜா.கெளதம சென்னா, மற்றும் ஒருங்கிணைப்பாளா் திருநாவுக்கரசு ஆகியோா் செய்திருந்தனா்.
