அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கா.மு.சுப்பராய அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வினை மொத்தம் 892 போ் எழுதவுள்ளனா். இவா்களுக்கு பொதுத்தோ்வு குறித்து ஊக்கமுட்டும் வகையில் எம்எல்ஏ எழிலரசன் கலந்துரையாடினாா். அனைவருக்கும் தோ்வு எழுத தேவையான கல்வி உபகரணங்களான பென்சில், பேனா மற்றும் ஜாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றையும் வழங்கினாா்.
தொடா்ந்து கா.மு.சுப்பராய முதலியாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.94 லட்சத்தில் 4 புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. பூமி பூஜை நிகழ்வில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.