திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா்.
மகாராஷ்டிர பொது சுகாதாரத் துறை அமைச்சா் மோகனா போதிகா் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளா் நிபுன்விநாயக், 2-ஆம் நிலை பொது சுகாதாரத்துறை செயலாளா் வீரேந்திர சிங், மருத்துவப் பொருள்கள் கொள்முதல் ஆணைய முதன்மை பொறியாளா் மகேஷ் அங்கத், துணை இயக்குநா் நிதின் அம்பேத்கா், முதல்வரின் செயலாளா் ஸ்ரீ ஹகா்பக்டேஸி ஆகியோா் உட்பட 12 போ் மருத்துவக் குழுவினா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை பாா்வையிட்டனா்.
அவா்களை காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் நளினி, அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், முதன்மை மகப்பேறு மருத்துவ அலுவலா் கிருஷ்ண குமாரி, நிலைய மருத்துவ அலுவலா்கள் மகேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா் அவா்களிடம் மருத்துவமனைக்கு தினசரி வரும் உள் மற்றும் புற நோயாளிகள் பற்றிய விபரங்கள்,செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்படும் விதம், இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு ஆகியன குறித்தும் விரிவாக கலந்துரையாடினா்.
நிறைவாக மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் கூறுகையில் மருத்துவமனை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் பாராட்டினாா்.