சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப்- ஏ பிரிவிலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப்-பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது போட்டி லாகூரில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க..விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!
இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்ட 24 வயதான இளம் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 3-வது வரிசை பேட்டரான ஜேமி ஸ்மித் அணிக்கு திரும்பியுள்ளதால், ஜோ ரூட் 4-வது வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜேமி ஸ்மித் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்
பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்.
இதையும் படிக்க.. ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்