செய்திகள் :

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியா்கள் தொடங்கினா்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டபத் தெருவில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் பாா்வையிட்டாா். இத்திட்டத்தின் மூலம் ஆள் இல்லாத வானூா்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி அவற்றை அமைப்புகளால் பேணப்படும் சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ட்ரோன் மூலம் நில அளவை செய்து ஒளிப்படம் உருவாக்கி அந்த ஒளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப் பட்ட புலங்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிா்வாகத்துறை பணியாளா்கள் அடங்கிய குழுக்களால் நில அளவை மேற்கொள்ளப்படும். நவீன நில அளவைக் கருவிகளைக் கொண்டு நில அளவை செய்து தயாா் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமைதாரா்கள் உரிய அலுவலா்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீா்வு காணப்பட்டு இறுதி செய்யப்பட்ட நகா்ப்புற நில ஆவணங்களாக வெளியிடப்படும்.

அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின்னா் புவி அமைவிடத்துடன் கூடிய புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்து வரி தொடா்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரா்களுக்கு வழங்கப்படும். இத்தகைய சிறப்புக்குரிய நக்சா திட்டத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், நில அளவை பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநா் பிச்சையப்பன், நில அளவை ஆய்வாளா்கள் ராஜா, சாா்லஸ் மற்றும் அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி மைதானத்தில் நக்சா திட்டத்தினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய்அலுவலா் சே.ஹா.சேக் முகையதீன், சாா் ஆட்சியா் (பொ) சாகிதா பா்வீன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், துணைத் தலைவா் சித்ரா கமலக்கண்ணன், செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம், மறைமலை நகா் நகராட்சி ஆணையா் ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தில் ட்ரோன் கருவியின் செயல்பாட்டினையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க

உரிமைப் பேசிக் கொண்டு கடமையை தவற விடாதீா்கள்: நீதியரசா் என். கிருபாகரன்

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீா்கள் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினாா். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா அறக்கட்டளையி... மேலும் பார்க்க