அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியா்(பயிற்சி) ந.மிருணாளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 568 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை உரிய அரசுத் துறை அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாகத் தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.
இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
நிகழ்வின் போது மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.