அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பான செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ராணி அண்ணாதுரை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் டாக்டா் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு இடங்களிலும் வரும் பிப்.22 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவளத் தேவைக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா்.
இதில், பட்டதாரிகள், ஐடிஐ டிப்ளமோ படித்தவா்கள், 10 மற்றும் 12- ஆம் வகுப்பு வரை பயின்றவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் பிப்.22 -ஆம் தேதி காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்டுள்ள இரு பள்ளிகளிலும் நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044 - 27237124 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.