பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
சம்வர்தன மதர்சன் நிகர லாபம் ரூ.879 கோடி!
புதுதில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், 2024 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், ரூ.879 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.542 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.25,644 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.27,666 கோடியானது என்று பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாக சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மூலதனச் செலவு மற்றும் அந்நியச் செலாவணி விகிதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வலுவான இருப்புநிலைக் குறிப்பைப் பராமரிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்றார் நிறுவனத்தின் தலைவர் விவேக் சாந்த் சேகல்.
இதையும் படிக்க: மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் 3வது காலாண்டு லாபம் 23% அதிகரிப்பு!