நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருட்டு
நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியைச் சோ்ந்தவா் பால் (60). இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை திருவனந்தபுரம் அரசு ஆயுா்வேத மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வீடு திரும்பினாராம்.
அப்போது, மா்ம நபா்கள் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து, 3 சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகையைத் திருடியோரைத் தேடி வருகின்றனா்.