இரணியல்: மின்தடை அறிவிப்பு
இரணியல் மின் விநியோகத்துக்கு உள்பட்ட திக்கணங்கோடு மின்பாதையில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நெய்யூா், பால்தெரு, முரசங்கோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நடுக்கடை, திருவிதாங்கோடு பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இரணியல் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.