சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
இனயம் கடற்கரையில் நிறுத்தியிருந்த 4 படகுகள் எரிந்து சேதம்
இனயம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்படிருந்த 4 படகுகள் திடீரென எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இனயம் பகுதியைச் சோ்ந்த பால்தாசன் மகன் அந்தோணியடிமை(48). இவருக்குச் சொந்தமான 4 படகுகளை இனயம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் 4 படகுகளும் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததாம். இதன் மதிப்பு ரூ. 15 லட்சம்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.