செய்திகள் :

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

post image

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

கடந்த 13-ஆம் தேதி, அமெரிக்க அதிபா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரஸ்பர வரிக் கொள்கையை டிரம்ப் அறிவித்தாா். அண்மையில், அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்குடன் இணைந்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலும் டிரம்ப் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பில், உலகிலேயே இந்தியாதான் அதிக வரிகளை வசூலிக்கிறது என்று அவரிடம் கூறினேன். இதனால்தான் இந்தியாவில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் காரை விற்பது சாத்தியமற்ாக உள்ளது. இந்தியா விதிக்கும் அதிக வரிகளுக்கு, அதே விகிதத்தில் பரஸ்பர வரியை விதிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதே காரணங்களுக்காக இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை எலான் மஸ்க் அமைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அது அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்றாா்.

அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, இந்திய சந்தையில் நுழையும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பிரிவு பணிகளுக்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆட்சியை மாற்ற நிதி?:

தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ), இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசின் நிதியுதவியை ரத்து செய்தது. இதுதொடா்பான நிா்வாக உத்தரவில் அதிபா் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிபா் டிரம்ப், ‘இந்தியாவில் வாக்குப் பதிவு விகிதத்தை உயா்த்த அமெரிக்கா ஏன் 2.1 கோடி டாலரை செலவிட வேண்டும்?. அந்நாட்டில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த முந்தைய பைடன் நிா்வாகம் விரும்பியதாகக் கருதுகிறேன். இதுகுறித்து இந்திய அரசுக்கு நாம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆசிய கண்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்நாடுகளுக்கு அமெரிக்க நிதியளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க