பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?
போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!
போப் பிரான்சிஸ் நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவருக்கு புதன்கிழமை எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தொற்றின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸுக்கு பாதுகாப்பு அளிக்கும் சுவிஸ் காவலர்கள், வாடிகனில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இறுதிச் சடங்குகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கல் பரவின.
ஆனால், பத்திரிகைகளில் வெளியாவது போன்று எவ்வித ஒத்திகையும் செய்யவில்லை என்றும், வழக்கமான பணிகளையே தொடர்ந்து வருவதாகவும் சுவிஸ் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் எலியா சினோட்டி விளக்கம் அளித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் சந்திப்பு
போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு புதன்கிழமை நேரில் சென்ற இத்தாலி பிரதமர் மெலோனி, அவரின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்த மெலோனி, போப் பிரான்சிஸ் வழக்கம்போல் நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை நேரில் சந்தித்த முதல் வெளிப்புற நபர் மெலோனி ஆவார். மருத்துவர்களும் போப் பிரான்சிஸின் பணியாளர்களை தவிர அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.