8வது நாளாக இன்றும் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிந்தது!
மும்பை: நிம்பிக்கையின் அடிப்படையில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகமான நிலையில், முதலீட்டாளர்கள் இன்று லாபத்தை பதிவு செய்ய தொடங்கியதால் மீண்டும் சரிந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 699.33 புள்ளிகள் சரிந்து 75,439.64 புள்ளிகளாவும் இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102.15 புள்ளிகள் குறைந்து 22,929.25 புள்ளிகளாக நிலைபெற்றது.
எட்டாவது அமர்வுகளாக இன்று, இந்திய பங்கு குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்தது முடிந்தது.
30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கில் இன்று அதானி போர்ட்ஸ் 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது. அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இன்று 2,931 பங்குகள் வர்த்தகமான நிலையில், 459 பங்குகள் உயர்ந்தும் 2,412 பங்குகள் சரிந்தும் 60 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
கார்ப்பரேட் வருவாய் ஆண்டின் தொடக்கத்தில் சந்தை எதிர்பார்ப்புகளை விட கணிசமாகக் குறைவாக இருந்ததால், குறிப்பாக மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை வெகுவாக பாதித்தது.
நிறுவனத்தின் வருவாய், இந்திய ரூபாய் தொடர் வீழ்ச்சி மற்றும் வர்த்தக போர் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தத நிலையில், இது அந்நிய நிறுவன முதலீட்டாளர்களை தொடர்ந்து வெளியேற செய்தது. மேலும் கார்ப்பரேட் வருவாயில் மீட்பு ஏற்படும் வரை இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் 2030 க்குள் இருவழி வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளன. அதே வேளையில், வரிகளைக் குறைத்து பங்குச் சந்தையின் அணுகலை அதிகரிப்பதற்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது.
வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இரு தலைவர்களும் தேசிய பாதுகாப்பு மற்றும் வேலை உருவாக்கத்தை உறுதி செய்யும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உறுதியளித்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில் இன்று சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்தும் டோக்கியோ சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.2,789.91 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.55 சதவிகிதம் உயர்ந்து 75.43 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: தொடா்ந்து சரியும் சா்க்கரை உற்பத்தி