தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
மும்பை: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாலும், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களின் உணர்வை தொடர்ந்து பாதித்து வருவதாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.
நேற்று சற்று உயர்ந்து முடிந்த நிலையில், இன்றை காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 82.65 புள்ளிகள் குறைந்து 22,876.85 புள்ளிகளாக இருந்தது.
வர்தக முடிவில் சென்செக்ஸ் 29.47 புள்ளிகள் சரிந்து 75,967.39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 14.20 புள்ளிகள் சரிந்து 22,945.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானக நிலையில், டெக் மஹிந்திரா, மாருதி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இன்றைய வர்த்கத்தில் 2,928 பங்குகள் வர்த்தகமான நிலையில், 722 பங்குகள் உயர்ந்தும், 2,127 பங்குகள் சரிந்தும் 79 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
பங்குச் சந்தை இயக்கம் பெரும்பாலும் உலகளாவிய நிகழ்வுகளால் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் அறிவித்து முடிந்து நிலையில், இனி கார்ப்பரேட் முடிவுகள் குறித்த ஆச்சரியங்கள் எதுவும் இல்லை என்றாலும், சந்தை இயக்கங்கள் உலகளாவிய காரணிகளால் உந்தப்படுகிறது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் ரூ.33,121 கோடி மதிப்பான பங்குகளை விற்றுள்ளனர். ஸ்மால் - கேப் பங்குகள் கரடியின் பிடியில் உள்ள நிலையில், மிட் கேப் பங்குகள் அவற்றின் உச்சத்திலிருந்து 18 சதவிகிதம் வரை சரிந்ததுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், ட்ரெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் எம் & எம் ஆகியவை நிஃப்டி டாப் 50-ல் இருந்து 2 முதல் 3 சதவிகிதம் சரிந்தது முடிந்தது. இதற்கு நேர்மாறாக டெக் மஹிந்திரா, விப்ரோ, அப்பல்லோ மருத்துவமனை, என்டிபிசி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 0.5 முதல் 1.5 சதவிகிதம் வரை உயர்ந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,937.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
நேற்று பங்குச் சந்தையில் லேசான மீட்சி தென்பட்ட போதிலும் இன்றைய பங்குச் சந்தையில் பலவீனம் நீடித்தது.
ஆசிய சந்தைகளில் இன்று சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது. 'அதிபர் தினத்தை' முன்னிட்டு நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.24 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 75.40 டாலராக முடிந்தது.
இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 6% உயா்வு