`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை வியாழக்கிழமை தொட்டுள்ளது.
சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்படும். கடந்த மாதம் 22ஆம் தேதி முதல்முறையாக ரூ. 60 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.
அதன்பிறகு தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை அவ்வப்போது சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டாலும் ரூ. 63 ஆயிரத்துக்கு குறையாமல் இருந்தது.
கடந்த பிப். 12ஆம் தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ. 64,480-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, ரூ. 64 ஆயிரத்தை கடக்காமல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 63,760-க்கு விற்பனையானது. இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 280 அதிகரித்துள்ளது.
புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ. 8,035-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 64,560-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க : 'பாரத் ஜோடோ விவாஹா’ பெயரில் திருமண அழைப்பிதழ்! சோனியா, ராகுலுக்கு அழைப்பு!
இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 109-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.