`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! ஐடிசி பங்குகள் 2% வீழ்ச்சி!
பங்குச்சந்தை இன்று (பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
75,672.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.45 மணியளவில், சென்செக்ஸ் 250.20 புள்ளிகள் குறைந்து 250.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.20 புள்ளிகள் குறைந்து 22,889.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
பொதுத்துறை வங்கிகள், மெட்டல், ஆட்டோமொபைல் துறைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் எப்எம்சிஜி நுகர்வோர் துறை இறக்கம் கண்டு வருகின்றன. ஐடிசி நிறுவனம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவைச் சந்தித்தது.
சென்செக்ஸ் பங்குகளில் மஹிந்திரா & மஹிந்திரா, ஐடிசி, மாருதி சுசுகி, எச்டிஎஃப்சி வங்கி, சொமாட்டோ, சன் பார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தன.
டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.