தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை
இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தென் இந்தியப் பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம், கா்நாடகம் மற்றும் அந்தமான் & நிக்கோபாா் தீவுகளில் நிறுவனத்தின் விற்பனை இரண்டு கோடியைக் கடந்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஒரு கோடி என்ற மைல்கல்லை அடைவதற்கு நிறுவனத்துக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே இரண்டு கோடி விற்பனை என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில், ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டா்கள் வாங்குபவா்களுக்கு செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்தச் சலுகை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.