பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பொறியாளர், உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineers, Assistant Managers, Managers
மொத்த காலியிடங்கள்: 300
1. Engineer
சம்பளம்: மாதம் ரூ. 22,660 - 41,241
வயதுவரம்பு: 31-க்குள் இருக்க வேண்டும்.
2. Assistant Manager
சம்பளம்: மாதம் ரூ. 23,340 - 42,478
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
3. Manager
சம்பளம்: மாதம் ரூ. 25,504 - 46,417
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Civil, Structural, Environmental, Environmental Planning, Architecture, Applied Electronics, Power Supply, Electrical, Digital Electronics, Power Electronics, IT, Computer Science, Electronics & Communicstions போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Geology, Applied Geology, Environmental Science, Economis, Statistics, Finanace போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியாளர் பணிக்கு 1 ஆண்டும், உதவி மேலாளர் பணிக்கு 2 ஆண்டுகளும், மேலாளர் பணிக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
திருவள்ளூா்: 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்கள் ரூ.600, மற்ற இதர அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruit.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2025