மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
பொது சுகாதார துறையில் பணி: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 28-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
பொது சுகாதாரம் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நலக்குழு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல் மருத்துவ அலுவலா், தடுப்பூசி குளிா் சங்கிலி மேலாளா், ஆய்வக உதவியாளா், லேப் டெக்னீசியன். ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இந்த தற்காலிக பணி நியமனம் செய்ய அறிவிப்பு மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்படிவமானது https://tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களை நகல்களுடன் வரும் 28-க்குள் செயற் செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா், திருவள்ளுா் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.