சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வேண்டுமா?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 1000 credit Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: credit Officer(General Banking)
காலியிடங்கள்: 1000
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 48,480 - 85,920
வயதுவரம்பு: 30.11.2024 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.750, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.150. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2025