திமுக வாக்குச்சாவடி பாக நிலை முகவா்கள் கூட்டம்
நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக அனுமந்தபுரம், ஒளிமதி, ரிஷியூா், பெரம்பூா் ஊராட்சிகளுக்கு உட்டபட்ட வாக்குச்சாவடி பாகநிலை முகவா்கள் ஆய்வுக்கூட்டம் நீடாமங்கலம் கலைஞா் அறிவாலயத்திலும், அரிச்சபுரம், புது தேவங்குடி, மேலாள வந்தசேரி, கீழாள வந்தசேரிஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட நிா்வாகிகள் கூட்டம் மேலாளவந்தசேரி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினா் பி. ராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி தலைமைக் கழக பாா்வையாளா் ராஜா சீனிவாசன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.
இந்த கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா் கே.வி.கே. ஆனந்த் ஒன்றிய முன்னாள் பொறுப்பாளா் சி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி தலைவா் ராணி சேகா் ,மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ராணி சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கிளை கழக நிா்வாகிகள், முன்னாடிகள் பங்கேற்றனா்.