மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை!
புணேயில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 22 துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.PN-REC-ADV-DYENGR-2025-03
பணி: Deputy Engineer
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.
பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துத்தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.2.2025
மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக்செய்யவும்.