செய்திகள் :

ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் புதிய போஸ்டர்!

post image

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து, காந்தாரா - 2 பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ஹனுமன் - 2 மற்றும் பிரஷாந்த் நீல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதையும் படிக்க: விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!

அடுத்ததாக, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளார்.

சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படம் உலகளவில் 21.1.2027 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே, நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் சத்ரபதி சிவாஜி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-02-2025வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாத... மேலும் பார்க்க

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் ப்ரோமோ!

நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.இவர் தற்போது அறிமுக ... மேலும் பார்க்க

திவ்யபாரதியுடன் காதலா... என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?!

ஜி.வி.பிரகாஷும் நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதி கடந்தாண்ட... மேலும் பார்க்க

ஏகே - 64 இயக்குநர் இவரா?

நடிகர் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சியைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார்.இதில், விடாமுயற்சி திரைப்... மேலும் பார்க்க