சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
ஏகே - 64 இயக்குநர் இவரா?
நடிகர் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சியைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார்.
இதில், விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமரசனங்களைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்தது.
தற்போது, நடிகர் அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கங்குவா தோல்வியிலிருந்து சிவாவுக்கு திருப்பத்தைக் கொடுக்க மீண்டும் அஜித் அவருக்கு வாய்ப்பு தரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிக்க: பராசக்தி குழுவினருக்கு விருந்தளித்த சிவகார்த்திகேயன்!
அதேநேரம், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித் இடையே சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இது ஏகே - 64 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஏகே - 64 படத்தை இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.