செய்திகள் :

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

post image

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அமைச்சர் பொன்முடி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்றார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, முன்னாள் எம்.பி பொன் கௌதமசிகாமணி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சென்றனர்.

விழுப்புரம் - பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்

அப்போது, அமைச்சர் பொன்முடி மீது ஊர்மக்கள் சேற்றை வாரியிறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அமைச்சருடன் வந்திருந்த தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் மீது சேறு வீசப்பட்டதாகவும், பணிசெய்ய விடாமல் தடுக்கப்பட்டதாகவும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், அமைச்சர் மீது சேற்றை அள்ளி வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீதும் போலீஸ் வழக்கு பதிவுசெய்து தேடிவந்தது.

கைதுசெய்யப்பட்ட ராமகிருஷ்ணன்

இந்த நிலையில், ராமகிருஷ்ணனை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு படை இன்று கைது செய்து திருவெண்ணைநல்லூர் போலீஸில் ஒப்படைத்திருக்கிறது. அதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமகிருஷ்ணன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரத்தால் இருவேல்பட்டு குறிவைப்படுத்தாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க