கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2இல் அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் எட்டு பேர் இருந்தநதாகவும், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஷாஹித் நிர்மல் மஹ்தோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கமர்புகூரில் வசிக்கும் பியாலி சாஹா, தெமுலி சாஹா மற்றும் பனோபா சாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.