தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
இறுதி நாளில் 1.29 முறை சப்ஸ்கிரைப் ஆன குவாலிட்டி பவர் ஐபிஓ!
புதுதில்லி: குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று (கடைசி நாளில்) 1.29 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் ஆனதாத நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்.எஸ்.இ.யில் உள்ள தரவுகளின்படி சுமார் 1,43,31,304 பங்குகளுக்கு விற்பனைக்கு பெறப்பட்டது. சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில், இது 1.83 மடங்கு அதிக சப்ஸ்கிரிப்ஷனைப் பெற்ற நிலையில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு ஆனது 1.45 மடங்கு சப்ஸ்கிரைப் ஆனதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், எரிசக்தி பரிமாற்ற உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.386 கோடிக்கு மேல் சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது. மொத்தமாக ரூ.859 கோடி நிகரான ஐபிஓ-வில், பங்கு ஒன்றுக்கு ரூ.401 முதல் ரூ.425 வரை நிர்ணயிக்கப்பட்டது.
புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மெஹ்ரு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்களை கையகப்படுத்துவதற்கும், ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கான மூலதன செலவினத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் விரைவில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.
இதையும் படிக்க: ரூ.166 கோடிக்கு ஆர்டர் பெற்ற டிரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் ரெக்டிஃபையர்ஸ் நிறுவனம்!