ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும்வகையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2 நாள்களாக நடைபெற்றது.
இப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக இப்பகுதியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டு, 2 நாள்களாக பணிகள் நடைபெற்றன.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சத்தியமூா்த்தி, உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயா, உதவிப் பொறியாளா் ரெஜிவின் ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இப்பணிகள் நடைபெற்றன.