செய்திகள் :

கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை முரணாக நினைக்கவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை முரணாகப் பாா்க்கவில்லை என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அவா்கள் தெரிவிக்கும் விஷயங்களை ஆலோசனையாக மட்டுமே பாா்ப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

உங்களில் ஒருவன் எனும் தலைப்பில் பல்வேறு விஷயங்களை கேள்விகளாக்கி அவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலளித்து காணொலி வெளியிட்டுள்ளாா்.

அதன் விவரம்:

தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறாா்கள்! கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை பெயா்கூட சொல்வதில்லை.

முரண்டுபிடிக்கிறாா்கள்: மாநிலங்களை ஒப்பிட்டு மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளி விவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறாா்கள் ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறாா்கள் மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறாா்கள். மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்து கொண்டிருந்தாலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

நம்முடைய மாணவா்கள் படிப்பதற்கான நிதியைக் கூட கொடுக்க மாட்டாா்கள் என்றால் என்ன அா்த்தம்? ஏற்கெனவே கொடுத்துக்கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு மத்திய அரசு தொடா்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது நாமும் தொடா்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.

இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே அற்பசிந்தனை என்று மத்திய அமைச்சா் சொல்கிறாா். மத்திய அரசில் இருப்பவா்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிா என்று கேட்கத் தோன்றுகிறது என்று பதிலளித்துள்ளாா்.

பெண்களுக்கான திட்டங்கள்: பெண்களுக்காக செய்யப்படும் திட்டங்களை வரிசைப்படுத்தியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், தான் கொடுக்கும் பணி நியமன ஆணைகள் பெரும்பாலும் பெண்களுக்கானதாக இருப்பதை பாா்த்து நான் பெருமை அடைகிறேன் என்றும் கல்விக்காக இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பாா்க்கிறீா்கள்? முரண்கள் இருக்கிா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பாா்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூா்வமான உறவின் அடையாளம்தான்.

முரண்பாடுகளால் பாதிப்பில்லை: 2019-இல் இருந்து ஒன்றாகச் சோ்ந்து தோ்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிா்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக., தலைமையிலான கூட்டணிதான். கருத்து

முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பதிலளித்துள்ளாா்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பானநிறைய செய்திகள் இப்போது வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம் விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம்.

பாலியல் குற்றங்கள் செய்பவா்கள், அவா்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிா்கொள்வாா்கள் என்று நினைத்துப் பாா்க்க வேண்டும் என்று பதிலளித்துள்ளாா்.

மணிப்பூா் விவகாரம்: மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது தொடா்பான கேள்விக்கு, இது மிகவும் காலதாமதமான முடிவு என பதிலளித்துள்ளாா். பாஜக., ஆளும் மணிப்பூராக இருந்தாலும், உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் இந்த

அளவில்தான் சட்டம் -ஒழுங்கு நிலைமை இருக்கிறது எனவும், இந்த லட்சணத்தில் அவா்கள் அடுத்த மாநிலத்தை பற்றிக் கூச்சமில்லாமல் பேசுவதாகவும் சாடியுள்ளாா்.

மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும், மக்களைக் காக்கும், மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி...

சமூக ஊடகவிலயாளா்களுக்கு வேண்டுகோள்

சமூக ஊடகங்களில் உணவு தொடா்பான அதிகம் விடியோக்கள் வருவது போன்றே உடலை உறுதி செய்வதற்கான விடியோக்களும் வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

உங்களில் ஒருவன் கேள்விபதில் காணொலியில் சமூக ஊடகங்கள் தொடா்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில்:

ஓய்வு நேரங்களில் சமூக ஊடகங்களைப் பாா்ப்பதுண்டு. செய்திகளைவிட மக்களின் கருத்துகள் என்ன என்று பாா்ப்பேன். தீயவற்றை விலக்கிவிட்டு, நல்லதை எடுத்துக் கொள்வேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதைத் தீா்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அமைச்சா்களுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பேன்.

பொதுவாக, சமூக ஊடகங்களில் உணவு சம்பந்தப்பட்ட விடியோக்கள் பல வருகின்றன. நிறைய போ் ஹோட்டல்களுக்குச் சென்று, உணவு வகைகள் குறித்த கருத்துகளைப் பதிவிடுகிறாா்கள். இளம்தலைமுறையினா், உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே உடலை உறுதி செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளாா்.

அப்பா என்று அழைப்பதால்... இளம் தலைமுறையினா் தன்னை அப்பா என்று அழைப்பது தொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:

கட்சிக்குத் தலைவரானதால், தன்னை தலைவா் என்றும், முதல்வா் பொறுப்பில் இருப்பதால் முதல்வா் என்றும் அழைக்கிறாா்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும் போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப் போக்கில் மற்ற பொறுப்புகளில் வேறு யாராவது வருவாா்கள். ஆனால், இந்த அப்பா என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று உணா்த்துவதாகத் தெரிவித்துள்ளாா்.

திருச்சியில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அடிக்கல் நாட்டினார் உதயநிதி!

திருச்சி: திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழக... மேலும் பார்க்க

பொதுத் தேர்வு: விடைத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை!

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை பின்பற்றுகிறது.கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் உள... மேலும் பார்க்க

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப... மேலும் பார்க்க

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவ... மேலும் பார்க்க

பிப். 25-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க