``Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்.." - ட்ரம்ப் கூறியதென்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency - DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், DOGE-க்கு தலைமை தாங்க எலான் மஸ்கை விட புத்திசாலியான ஒருவரைத் தேடியதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் கடந்த மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு, எலான் மஸ்க் உடன் இணைந்து அளிக்கும் முதல் நேர்காணல் இது. உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவித் தொகைகளை நிறுத்திய பிறகு இது நிகழ்ந்துள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்கை தனது நிர்வாகத்தின் தலைமை செலவு குறைப்பாளராக நியமித்த காரணத்தையும் கூறிய ட்ரம்ப், "இவர் (Elon Musk) சிறந்தவர்தான்... ஆனால் நான் இவரை விட புத்திசாலியான நபரைத் தேடினேன். முழுவதுமாக தேடினேன்... என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னால் இவரை விட புத்திசாலியாக யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை சரியா? அதனால்தான் நாங்கள் நாட்டுக்காக இவரை நியமிக்க வேண்டியதாக இருந்தது." என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி" எனக் கூறினார் எலான் மஸ்க்.
Trump: "I couldn't find someone smarter than Elon Musk."
— The Vivlia (@TVivlia) February 19, 2025
JD Vance, this means you’re officially dumber than the guy who thinks Trump can impound congressional funds with an executive order. Ouch pic.twitter.com/eOBrP9ryQM
அரசு நிர்வாகத்தை சரிசெய்வதாக டொனால்ட் ட்ரம்ப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். அதன் அடிப்படியிலேயே DOGE உருவாக்கப்பட்டது. இந்த துறை செலவீனங்களைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான வேலைகளை ரத்து செய்துள்ளது.
இதற்கு எதிராக ஜனநாயக கட்சி ஆளும் அமெரிக்க மாகாணங்கள், லிபரல் சார்பு சட்ட குழுக்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
WATCH: President Trump praises DOGE leader @elonmusk as "a very good person" who "really cares for the country" during an exclusive interview with @seanhannitypic.twitter.com/GLeMzeaZRj
— Fox News (@FoxNews) February 19, 2025
DOGE -யின் வேலைகளைப் பாராட்டிய ட்ரம்ப், அதன் உறுப்பினர்கள் எலான் மஸ்கை விட மோசமான ஆடை அணிவதாக கூறினார். "மஸ்க் நிர்வாகத்தின் உத்தரவை ஏற்று நூறு மேதைகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவருடன் அவரை விட மோசமாக ஆடை அணியும் சில புத்திசாலித்தனமான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்... அவர்கள் வெறும் டி-சர்ட்களைத்தான் அணிகிறார்கள்" என்றார் ட்ரம்ப்.
இந்த நேர்காணலில், "ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது, அரசமைப்பை சரி செய்வதற்கான வாய்ப்பு" எனக் கூறினார் எலான் மஸ்க்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs