செய்திகள் :

``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ் எம்.பி.!

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை சுதா எம்.பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு ஏதாவது ஒரு நிதியை, நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் ஓதுக்கீடு செய்வார்கள் என தமிழக எம்.பிக்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் சிறிய அறிவிப்புகள் கூட இல்லை. தமிழகத்தை வெறுப்பு உணர்வோடு தான் நிதியமைச்சர் பார்க்கிறார்.

மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்

திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், தமிழக மக்களையும், மண்ணையும் வெறுப்பது போல தான் மோடி நடந்துக் கொள்கிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம். ஆனால், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்கான நிதியை கேட்பதை விட, மற்ற கதைகளை பேசி வருகிறார்.

கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு, தமிழ் மக்களும், மண்ணும், உணர்வாளர்களும் தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து திசை திரும்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்தக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பலை முருகன் ஒருநாள் வதம் செய்வார்" என்றார்.

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க

``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை'' - பா.ஜ.க அரசு முடிவு!

நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில... மேலும் பார்க்க

விகடன் இணையதளம் முடக்கம்: ``பாசிச ஊடுருவலின் அடையாளம்" -ஷாஜி என்.கருண் கண்டனம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக நூற்றுக்கணக்கான இந்தியர்களை, அந்நாட்டு ராணுவம் கைகால்களில் விலங்கிட்டு சொந்த இந்தியாவுக்கு திருப்பியனுப்பிய விவகாரத்தில், பிரதமர் மோடி எதுவும் கூறாமல் அமைதிய... மேலும் பார்க்க