UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்துரைத்தார்.
"நீங்கள் இந்த மொழியைக் கற்றுக்கொண்டால், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்." என்றார். ஆர்.எஸ்.எஸை குறிவைக்கும் விதமாக, "மோகன் பகவத் (ஆர்.எஸ்.எஸ் தலைவர்) இந்தியில் பேசுங்கள் எனக் கூறுவார், ஆனால் ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்களின் குழந்தைகள் ஆங்கில வழி பள்ளிகளில் படிப்பார்கள், மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வார்கள்" என்று பேசினார்.

அத்துடன், "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் யாரும் ஆங்கிலம் படிக்கக் கூடாது என்பார்கள். மோகன் பகவத் நாம் ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்பார். ஆனால் இந்த மொழி ஒரு ஆயுதம், இதைக் கற்றுக்கொண்டால் நீங்கள் எங்கு வேண்டுமானலும் செல்லலாம். தமிழ்நாடு, ஜப்பான், மும்பை எங்கும் செல்லலாம் எந்த நிறுவனத்திலும் பணியாற்றலாம். அவர்கள் நீங்கள் (மாணவர்கள்) ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். ஏனென்றால் இந்த மொழி பயன்படும் இடங்களுக்கு நீங்கள் செல்லக் கூடாது என நினைக்கின்றனர். தலித்துகளும், பழங்குடியினரும், ஏழைகளும் அங்கு வரக் கூடாது என நினைக்கின்றனர். ஆனால் ஆங்கிலம் உங்களது மிகப் பெரிய ஆயுதம். இந்தியும் முக்கியம் தான், உங்கள் வேர்களை நீங்குவது சரியான விஷயம் இல்லை. ஆனால் ஆங்கிலமும் மிக அவசியமானது." எனப் பேசினார்.
மேலும் அவர், "நீங்கள் அமெரிக்காவின் ரஷ்யாவின் அதிபருடன் பேச விரும்பினால் எந்த மொழியைப் பயன்படுத்துவீர்கள்? ஆங்கிலம்" என்றார்.
மேலும், தலித் மாணவர்களிடம், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் தலித்துகளின் பங்கு குறித்துப் பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...