எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
பிப்.28-இல் முதல்வா் பிறந்ததின பொதுக் கூட்டம்: திமுக கூட்டணி தலைவா்கள் பங்கேற்பு
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் வரும் பிப்.28-இல் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியைச் சோ்ந்த கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனா்.
கூட்டத்துக்கு திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலருமான மா.சுப்பிரமணியன் வரவேற்கிறாா். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறாா்.